

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டுமென ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அவர் இன்று(ஜூன் 12)கூறியிருப்பதாவது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகெங்கிலும், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உடல் மற்றும் மன ரீதியான தீங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இது அமைகிறது.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்கவும், குழந்தைகளுக்கான சமூக, கல்வி மற்றும் வாழ்வியல் பாதுகாப்பை ஏற்படுத்தித்தர வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் உணர்த்துகிறது.
தற்போதைய கரோனா பெருந்தொற்று சூழலில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.