முழு நேர ரேஷன் கடையை பகுதிநேரக் கடையாக மாற்ற எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

முழு நேர ரேஷன் கடையை பகுதிநேரக் கடையாக மாற்ற எதிர்ப்பு: மக்கள் போராட்டம்
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே முழு நேர ரேஷன் கடையைப் பகுதிநேரக் கடையாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

பெரும்பாலை அருகே உள்ள அரக்காசனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது எர்ரப்பட்டி கிராமம். இப்பகுதியிலுள்ள 650க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அருகில் நாகாவதி அணை பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர் முகாம் வாழ் மக்கள் சுமார் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எர்ரப்பட்டியில் அரசுப் பள்ளி அருகில் இயங்கி வந்த முழு நேர ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி இந்த முழு நேர ரேஷன் கடையைப் பகுதி நேர ரேஷன் கடையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை அறிந்த எர்ரப்பட்டி கிராம மக்கள் இன்று (12.6.2021) காலை எர்ரப்பட்டி ரேஷன் கடை முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதி சிறு, சிறு மலை கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ள நிலையில் பகுதிநேர ரேஷன் கடையாக மாற்றும்போது பொருட்கள் வாங்கக் கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும். எனவே எர்ரப்பட்டி ரேஷன் கடையைத் தொடர்ந்து முழு நேர ரேஷன் கடையாகவே இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in