

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கல்விச்சான்றிதழ்களை இழந்த பொதுமக்களுக்கு கட்டணமின்றி உடனடியாக நகல் சான்றிதழ்கள் வழங்குவதற்காக டிசம்பர் 14 முதல் 2 வாரங் களுக்கு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப் படும் பள்ளிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர், பிசிகேஜி மேல் நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், வித்யோதயா மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மடுவின்கரை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜோன்ஸ் ரோடு, சைதாப் பேட்டை, அவ்வை இல்லம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அடையாறு, குமாரராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி, அடையாறு, சிஎஸ்ஐ மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயபேட்டை, லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக் கேணி, லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர், புனித எபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மைலாப் பூர்,ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு, இந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டையார் பேட்டை, முத்தையால்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தம்புசெட்டி தெரு, பாரிமுனை, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம், ஜிஎம்டிடிவி மேல்நிலைப்பள்ளி, சவுகார் பேட்டை, லூர்து மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர், புனித சூசை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.எச். சாலை, பெரம்பூர், ஏவிஎம் ராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம், அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புரசை வாக்கம், பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோடம் பாக்கம், பாரத வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம், கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எருக்கஞ்சேரி, ஈவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, குட் ஹோப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், குருநானக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி, ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், ஜெயகோ பால் கரோடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியார் நகர், ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர், கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம், கல்கி ரங்கநாதன் மான்ட்போர்ட் பள்ளி, பெரம்பூர், லிட்டில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி.நகர், மெர்க்குரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்கேபி நகர், மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பி.என்.தவான் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயப் பேட்டை, ருக்மணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப் பாக்கம், எஸ்எம்டி மாலதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர், ஸ்பிரிங் ஃப்பில்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கே.கே.நகர், ஏ.கணேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி, கிருஷ்ண சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், புனித ஜோன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வில்லி வாக்கம், டிஎம்எம்எஸ் சண்முகசுந் தரம் அண்ட் ஏபி சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏழுகிணறு, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோடம் பாக்கம், பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர், சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர், பிஎஸ்இ ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, யூனியன் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, கார்த்திகேயன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபழனி.
காஞ்சிபுரம் மாவட்டம்
கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரும்புதூர், அரசு மேல்நிலைப்பள்ளி, மொளச்சூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்றத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரும்புதூர், அரசு உயர் நிலைப்பள்ளி, மாங்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி, திருமுடி வாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல், அரசு உயர்நிலைப்பள்ளி, முகலிவாக்கம், சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, பரங்கிமலை, அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல் பட்டு, இந்து மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அச்சிறுப் பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்போரூர், அரசு மேல்நிலைப்பள்ளி, பொலம் பாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கன்கரணை, ஜே.ஜி. நேஷனல் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒக்கியம் துரைப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுக்கு ன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி, சேலையூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, செங்கல்பட்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடப்பாக்கம்.
திருவள்ளூர் மாவட்டம்
டிஆர்பிசிசிசி இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர், அரசு மேல் நிலைப்பள்ளி, வெள்ளியூர், அரசு மேல்நிலைப்பள்ளி, கடம்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரம்பாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளி, கனகம்மாசத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாலங் காடு, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருத்தணி, அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெடிய ங்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொதட் டூர்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளி, பூண்டி, அரசு மேல்நிலைப் பள்ளி, பென்னலூர்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை, அரசு மேல்நிலை ப்பள்ளி, பெரியபாளையம், இமாகுலேட் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆவடி, அரசு மேல்நிலைப் பள்ளி, திருமழிசை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளி, மீஞ்சூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம், வெள்ளையன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி, திருவொற்றியூர், அரசு மேல்நிலைப்பள்ளி, பாடியநல்லூர், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, சோழவரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போரூர், அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல்.