‘தி இந்து’ வாசகர்கள் உதவிக்கரத்துடன் சென்னையில் நிவாரண சேவை

‘தி இந்து’ வாசகர்கள் உதவிக்கரத்துடன் சென்னையில் நிவாரண சேவை
Updated on
1 min read

கடலூர் மற்றும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சென்னையில் மிக அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது.

சென்னையில் மிகக் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மக் களுக்கு, ‘தி இந்து’ தமிழ் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் பத்தாயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருட்கள் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு நேற்று காலை முதலே வர ஆரம்பித்தன. வேலூர் வாச கர்கள், உணவு பொட்டலங் களோடு சென்னை வந்தடைந் தனர். அவர்கள் மூலமாகவே, வட சென்னை பகுதியில் 1,200 பேருக்கு விநியோகிக்கப்பட்டன.

தனி வாகனத்தோடு வந்த பவானி வாசகர்கள், 4,000 சப்பாத்திகள், போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்களை, அசோக் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட இடங் களில் அவர்களே நேரடியாக விநியோகித்தனர்.

கிட்டத்தட்ட 8,200 உணவுப் பொட்டலங்களும், 1,000 போர்வை களும், 1,000 பாய்களும், 600 பால் பாக்கெட்டுகளும், பலநூறு பிஸ்கட் பாக்கெட்டுகளும், குழந் தைகள் மற்றும் பெண் களுக்கான உடைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மக்களை நிவாரணம் சென்றடைந்துள்ளது.

பல கல்லூரி மாணவர்களும், வாசகர்களும் குடும்ப சகிதம் தாமாகவே முன்வந்து நிவா ரணப் பணிகளை செய்து வரு கின்றனர். தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் ‘தி இந்து’ மையங் களை வந்தடைகின்றன. வாசகர் களின் ஒத்துழைப்போடு, பாதிக்கப் பட்டவர்களின் கண்ணீரை துடைக்கும் பணி தொடரும்.

‘தி இந்து’ நெகிழ்ச்சி

நிவாரணம் வழங்க வாசகர்களுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு திருச்சியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்பு கொண்டனர். தங்களால் என்ன நிவாரணம் செய்ய முடியும் என கேட்டுத் தெரிந்து கொண்டு, நண்பர்களிடம் நிதி திரட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பல விவசாயிகளும், வயதானவர்களும், வெளிநாடுகளில் உள்ள வாசகர்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘தி இந்து’-வை தொடர்பு கொண்டு பேசியது நெகிழ்ச்சியைத் தந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in