தொழிற்சாலைகளில் விபத்துகளை குறைப்பது அவசியம்; தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்

தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக அலுவலர்களின் பணித் திறனாய்வு கூட்டம்அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலர்  கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு,  சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார், இயக்குநர் கே.ஜெகதீசன் பங்கேற்றனர்.
தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக அலுவலர்களின் பணித் திறனாய்வு கூட்டம்அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார், இயக்குநர் கே.ஜெகதீசன் பங்கேற்றனர்.
Updated on
1 min read

தொழிற்சாலைகளில் விபத்துகளை குறைக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தொழிலக பாதுகாப்பு இயக்கக அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும்சுகாதார இயக்கக அலுவலர்களின் பணித் திறனாய்வு கூட்டம், சென்னை கிண்டி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்றார்.

கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் கிர்லோஷ் குமார்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி. செந்தில்குமார், இயக்குநர் கே.ஜெகதீசன் மற்றும் இயக்ககஅலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அமைச்சர் வழங்கினார்.

தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க சிறப்பாக செயலாற்றி, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in