Published : 26 Dec 2015 09:22 AM
Last Updated : 26 Dec 2015 09:22 AM

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: 710 உறுப்பினர்கள் வாக்களித்தனர்

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் 710 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக் கான தேர்தல் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் நளினி தலைமை யிலான அணி வெற்றி பெற்றது. சங்கத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிர்வாகிகள் சிலர் பதவி விலகியதால் மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் உரு வானது.

இந்நிலையில் சங்கத் துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர்.மஹாலில் நேற்று நடைபெற்றது. சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த 1341 உறுப்பினர்களில் நடி கர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், ‘ஆடு களம்’ நரேன், நடிகைகள் வடிவுக் கரசி, சீதா, தேவிப்பிரியா உட்பட 710 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் ‘வசந்தம்’ அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன் போட்டியிட்டார். அவரது அணியில் துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செய லாளர் பதவிக்கு போஸ் வெங்கட் உள்ளிட்டோர் போட்டி யிட்டனர். ‘புதிய அலைகள்’ அணி சார்பில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், துணைத் தலைவர் பதவிகளுக்கு மனோபாலா, சுந்தர் உள்ளிட் டோர் போட்டியிட்டனர். ரவி வர்மா தலைமையிலான ‘உழைக்கும் கரங்கள்’ அணியில் பொதுசெய லாளர் பதவிக்கு எஸ். கனகப்பிரியா, பொருளாளர் பதவிக்கு ஜெயந்த் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க வரும் ‘ஆடுகளம்’ நரேன், தேவிப்பிரியா உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x