

“இன்னும் மூணு மாசத்துக்கு ஆப்ளிகேஷன் அது இதுன்னு என்கிட்ட யாரும் வராதீங்கப்பா... தளபதி எல்லாத்தையும் ரொம்ப மைனூட்டா வாட்ச் பண்றாரு” என்று தனது விசுவாச வட்டத்துக்கு அறிவுறுத்தி இருக்கிறாராம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதுபோலவே அமைச்சர் கே.என்.நேருவும், “டேய்... எங்கயாச்சும் போயி யாருக்கிட்டயாச்சும் ஏழரையைக் கூட்டிட்டு வந்துடாதீங்கடா. தளபதி முன்ன மாதிரி இல்ல. நீங்க ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிட்டு வந்தீங்கன்னா என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிருவாரு. உங்களுக்கு ஏதாச்சும் காரியம் நடக்கணும்னா என்கிட்ட சொல்லுங்கடா... நான் முடிச்சுத் தர்றேன். நீங்கபாட்டுக்கு நேரடியா தலையிட்டு சிக்கல் பண்ணிடாதீங்கடா” என்று திருச்சி திமுக பொறுப்பாளர்களுக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்