Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு 44 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம்

சென்னை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மேலும் 44 அரசு வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை அரசு வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். வேறு எந்த பதவிகளுக்கும் நிரந்தரமாக அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

தற்காலிகமாக 23 பேர்

அதேநேரம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதிட 23 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் 44 பேரைதற்காலிக அரசு வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராக ஏ.செல்வேந்திரன், ஆர்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகர், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுச்சாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமார், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், சி.ஜெயப்பிரகாஷ், விபிஆர் இளம்பரிதி, யு.பரணிதரன், கே.திப்புசுல்தான், கேஎம்டி முகிலன், எல்எஸ்எம் ஹசன் பைசல், எஸ்.ஜே.முகமது சாதிக், யோகேஸ் கண்ணதாசன், ஏ.இ.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்தர், ஸ்டாலின் அபிமன்யு, என்ஆர்ஆர் அருண் நடராஜன்,எம்.ஆர்.கோகுலகிருஷ்ணன்,பி.பாலதண்டாயுதம், டிஎன்சி கவுசிக் ஆகியோரும், கிரிமினல்வழக்குகளில் ஆஜராக வி.ஜெ.பிரியதர்ஷனா, ஆர்.வினோத்ராஜா, எஸ்.சுகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இதேபோல, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவில் வழக்குகளில் ஆஜராக எம்.லிங்கதுரை, கே.எஸ்.செல்வகணேசன், பி.சரவணன், ஆர்.ராகவேந்திரன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சண்முகவேல், டி.காந்திராஜ், ஏ.பாஸ்கரன், பி.சுப்புராஜ் ஆகியோரும், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதிடஆர்.எம்.அன்புநிதி, டி.செந்தில்குமார், சஞ்சய்காந்தி, ஆர்எம்எஸ்சேதுராமன், பி.கோட்டைச்சாமி, இ.அந்தோணி சகாய பிரபாகர்ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x