

வெள்ள பாதிப்பு மற்றும் மறு வாழ்வு பணிகளுக்காக நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தை ‘கடுமை யான பாதிப்புகள்’ ஏற்பட்ட மாநிலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு களை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் அடிப் படையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி செல விடவுள்ளேன்.
பசுமைத் தாயகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வட்டங்களிலும் 12.12.2015 (இன்று) மற்றும் 13.12.2015 (நாளை) காலை 8.00 மணி முதல் மாலை வரை நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. என்று கூறியுள்ளார்.