

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணைய நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டது.தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை வியாபாரிகளுக்கு 8 ஆயிரத்து 239 டோஸ், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் வியாபாரிகளுக்கு 2 ஆயிரத்து 143 தடுப்பூசிகளும், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.