Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

மறைந்த ஏஎம் ஜெயின் கல்லூரி செயலர் சர்தார்மால் சோடியாவுக்கு ஆசிரியர்கள் அஞ்சலி

சென்னை

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அகர்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரியின் (ஏஎம் ஜெயின்) செயலாளராக இருந்தவர் சர்தார்மால்சோர்டியா(82). இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

இவர் ஜெயின் கல்லூரியின் செயலாளராகக் கடந்த 1990-ம்ஆண்டு பதவியேற்றார். இவர் பதவியேற்றதில் இருந்து கல்லூரியின் முன்னேற்றத்துக்குப் பல முக்கிய பணிகளைச் செய்து வந்துள்ளார். மாணவர்களின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

சமீப காலங்களில் கல்லூரிவளாகத்துக்குள் 2 கரோனா சிகிச்சை மையத்தை அமைத்தார். அதன் மூலம், நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் எடுப்பதற்கான வசதியைச் செய்தார். கரோனா பாதித்த நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, சிறப்பாகச் சேவை செய்து வந்தார்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால், பாதிக்கப்பட்ட சர்தார்மால் அதிலிருந்து மீண்டு குணமடைந்தார். இதற்கிடையே, சேத்துப்பட்டில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் அவர் காலமானார்.

அவரது உடலுக்கு ஏஎம்ஜெயின் கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, திநகரில் உள்ள மின் மயானத்தில் அவரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, சர்தார்மாலின் மனைவிஉடல்நலக்குறைவால் சமீபத்தில்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x