Published : 22 Jun 2014 11:18 AM
Last Updated : 22 Jun 2014 11:18 AM

பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளை புரிந்துகொள்வது எப்படி?: பயிற்சிப் பட்டறைகள் நடத்தும் பெண் மருத்துவர்

‘அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.. இன்ஜினீயர், டாக்டர் ஆகவேண்டும்.. வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று தங்க ளுக்குள் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அதை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் பெற்றோர்கள். இதனால் அவர்கள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங் களாக வளர்கிறார்களேத் தவிர, மனிதத்தின் அறம் சார்ந்த பண்புகளை தெரிந்து கொள்ளா மலேயே போய்விடுகிறார்கள்’.. இந்தக் காலத்து கல்வி முறையை நினைத்து அக்கறையோடு கவலைப்படுகிறார் ஆதிலட்சுமி குருமூர்த்தி.

மதுரையைச் சேர்ந்த இவர், மகப்பேறு மருத்துவர். அரிமா சங்கத்தில் தென் இந்தியாவின் முதல் பெண் கவர்னர். இவர் அரிமா கவர்னராக இருந்தபோதுதான் முதல்முறையாக மதுரையில் விபத்து மீட்பு மையங்களை தொடங்கினார். இப்போதுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதுதான் முன்னோடி என கூறலாம். கைராசி மருத்துவர் என பெயரெடுத்த இவர், கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவ சேவையை விட்டுவிட்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருக்கிறார். எதற்காக? அதை அவரே சொல்கிறார்...

எனது மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பலர் முன்னிலை யில் கண்டபடி திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பெற்றோருக்கு சிகிச்சையோடு கவுன்சலிங்கும் சேர்த்துக் கொடுத் திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை மட்டுமே குற்றம் சொல்லி பிரயோஜன மில்லை. தங்களைப் பற்றி புரிந்து கொள்ளும் வாய்ப்பை பிள்ளைகளுக்கு பெற் றோர் கொடுப்பதில்லை. இதுதான் பிரச்சினையே. பெரும்பாலான பிள்ளைகள் வழி தடுமாறிப் போவதும் இதனால்தான்.

12 வயது பையன் மொபைல் போன் வாங்குவதற்கும் கிரிக்கெட் மட்டை வாங்குவதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். 17 வயது பையன் புது பைக் வாங்கு வதற்காக குழந்தை களையே கடத்துமளவுக்கு செல்கிறான். தங்கள் ஆடம்பரத் தேவைக்காக எல்லாவற்றுக்கும் துணிந்து விடுகி றார்கள். இதை யெல்லாம் இவர் களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? இன்றைக்கு, பெரும்பாலான பொருட்களை பெண்களையும் குழந்தைகளையும் வைத்தே விளம்பரம் செய்கிறார்கள். கண்ட கண்ட விளம்பரங்களைப் பார்த்து விட்டு ஒவ்வாத பண்டங்களை வாங்கி உண்கிறார்கள். இதனால் சிறுநீரக கோளாறுகள், இதய நோய்கள், ஒபிசிட்டி பிரச்சினை எல்லாம் வருகிறது. இந்தியாவில் 40 சதவீத குழந்தைகள் ஒபிசிட்டி யுடன் இருப்பதாகச் சொல்கிறார் கள். அதேசமயம், இந்தியாதான் அதிகமான இளைஞர் வளம் உள்ள நாடு. இந்த இளைஞர்களை சரியாக கொண்டு செல்லாவிட்டால் என்னாகும் நிலை?

மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவரின் ஊட்டி சொகுசு பங்களாவை இன்டர் நெட்டில் பார்த்தேன். அந்த அமைச்சருக்கு தண்டனை கிடைத் தாலும் இந்த பங்களாவை பறிக்கப் போவதில்லை. இதை எல்லாம் பார்க்கும் இளைஞர்கள், ‘தவறு செய்தால் சொகுசாக வாழலாம். ஜெயிலுக்குப் போனாலும் திரும்பி வந்து சொகுசு வாழ்க்கையை தொடரலாம்’ என்ற மனநிலைக்கு வருகிறார்கள். நமது வாழ்வியல் சூழலில் கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பே தகர்ந்துவிட்டது. ஆனால், அண்மைக்காலமாக பலரும் கூட்டுக்குடும்பத்தின் அருமையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் வேலையைத் தான் இப்போது செய்து கொண்டி ருக்கிறேன். இவற்றை பிள்ளைக ளிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர் களுக்கும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறேன். ‘கொஸ்ட் ஃபவுண் டேஷன்’ (Quest Foundation) மூலம் என்னைப்போல நிறைய பேர் உலகம் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் மட்டுமின்றி இலங் கைக்கும் சென்று வந்திருக் கிறேன். தமிழகத்தில் நான் மட்டுமே இந்தப் பணியைச் செய்கிறேன்.

தன்னம்பிக்கையை வளர்த்தல், கூச்சமின்றி பேசுதல், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல், நல்ல நண்பர்களை தேர்வு செய்தல், பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல் இதையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இந்தக் காலத்து பெற்றோருக்கும் ஆசிரியர் களுக்கும் பொறுமை இருப்ப தில்லை; நேரமும் இல்லை. மதிப்பெண் மட்டுமே அவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறது. இதனால் பிள்ளைகள் குறிப்பாக பாலி டெக்னிக், இன்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் படும் சிரமங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண் டும், வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கேற்ற முறை யில் அவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கும் பெற்றோர் களுக்கும் கவுன்சலிங் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது இன் றைக்கு ஆரம்பித்து நாளைக்கு முடியும் வேலை இல்லை. ஆனால், ஒருநாள் நிச்சயம் இதற்கான பலனை பார்க்கலாம்.. நம்பிக்கையோடு சொன்னார் ஆதிலட்சுமி குருமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x