

வங்கி ஊழியராக நடித்து மாற்றுத் திறன் கொண்ட மூதாட்டியிடம் 10 பவுன் நகையைப் பறித்த உறவுக்காரப் பெண் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த அழகர் மனைவி முனியம்மாள்(60). விபத்தில் இடது கையை இழந்த இவர், கணவர் இறந்த நிலையில் தனியாக வசிக்கிறார்.
இவரது வீட்டுக்கு மருத்துவ ஊழியர் போன்ற சீருடை அணிந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் கரோனா ஆய்வுக்கு வந்திருக்க லாம் என நினைத்து அவரை சந்தேகிக்கவில்லை.
இந்நிலையில், நீண்ட நேரமாக முனியம்மாள் வெளியில் வரவி ல்லை. அருகில் வசிப்போர் வீட்டு க்குள் சென்று பார்த்தபோது, வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் முனியம்மாள் கிடந்தார்.
உசிலம்பட்டி தாலுகா போலீ ஸார் விசாரணையில், வங்கியில் இருந்து அடகு நகைக்கு நோட்டீஸ் விநியோகிக்க வந்ததாகக் கூறி, முனியம்மாளை கட்டிப்போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை அப்பெண் பறித்துச் சென்றது தெரிய வந்தது.
நெருங்கிய உறவி னர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
முனியம்மாளின் சகோதரர் ஒருவரின் மருமகள் உஷா(33) என்பவரே மூதாட் டியிடம் செயின் பறித்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார், 10 பவுனை மீட்டனர்.
சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் நகை திருடிய பெண்ணை கைது செய்த போலீஸாரை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார்.