Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி கடும் எச்சரிக்கை

பத்திரப் பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களைப் பயன்படுத் தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் காலதாமதமின்றி பதிவுகளை மேற்கொள்ள புதிய வசதிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று இரண்டாம் நாளாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஒத்தக்கடை, சோழவந்தான், அலங்காநல்லூர் என 6 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க, கூட்டத்தைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பத்திரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். தாமதமின்றி உடனே பதிவு செய்யப்பட வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் மற்றும் நகல்களை மறுநாளே வழங்க வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் வழங்கவும், ஒலிபெருக்கி மூலம் டோக்கன் எண், பெயர், பதிவு நடக்கும் நேரம் பற்றிய விவரங்களைப் பதிவுதாரர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத் தியுள்ளோம்.

இந்த விவரங்கள் அனைத்தும் அலுவலகத்தின் முகப்பில் வைக் கப்படும் மின்னணுத் திரையில் தெரிய வேண்டும். இந்த நேரத் துக்கு வந்ததும் உடனே பதிவு செய்து மக்களை அனுப்பிவிட வேண்டும். அவர்கள் அதிகநேரம் காத்திருக்கும் நிலை இருக்கக் கூடாது.

மாநிலத்திலுள்ள 575 பதிவு அலுவலகங்களிலும் இந்த நடை முறை அமல்படுத்தப்படும். முதற்கட்டமாக மதுரை பதிவு மாவட்டத்தில் உள்ள 102 பதிவு அலுவலகங்களில் இந்த வசதிகள் உருவாக்கப்படும். பத் திர எழுத்தர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது.

லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடம் நியாயமான கட் டணம் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து 575 பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னறிப்பு இன்றி அடிக்கடி ஆய்வு நடத்தப்படும்.

மதுரையில் ரூ.70 கோடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் அமையவுள்ள நூலகத் துக்கான இடம் ஓரிரு நாளில் தேர்வு செய்யப்படும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கூறுவதுபோல் கரோனா மர ணங்கள் மறைக்கப்படுவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அரசு வெளிப்படைத் தன்மையாகச் செயல்படுகிறது, என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x