

சிம்புவுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்தாவிட்டால், இந்து அமைப்புகளின் சார்பில் மாநிலம் முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவசேனா மாநில அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் நேற்று முத்துகிருஷ்ணன் பேசியதா வது: சிம்பு தேச துரோகம் செய்ததுபோல் இங்கு போராட்டம் நடக்கிறது. ஆபாசத்தை எதிர்ப்பவர் கள் நடிகைகள் முக்கால் நிர் வாணமாக நடிக்கும்போதும், சினிமாவில் அருவருக்கத்தக்க பாடல்கள் வந்தபோதும் எங்கு சென்றனர்?
டி.ராஜேந்தர் ஆன்மிகத் தேடல் கொண்டவர். இந்து சின்னங்களை அணிபவர். நடிகர் சங்க தலைவர் நாசருக்கு எதிராக தேர்தலில் சிம்பு செயல்பட்டார் என்பதால், சிம்புவை தொழில்ரீதியாக முடக்க நினைக்கிறார்கள் இதை இந்து இயக்கங்கள் ஒருபோதும் அனும திக்காது. சிம்புவுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்தாவிட் டால், இந்து அமைப்புகளின் சார்பில் மாநிலம் முழுவதும் அவ ருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்றார்.