

“அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களைத் தேர்வு செய்யும்போது சர்ச்சைக்கு இடமளிக்காத வகையில் கவனமாக தேர்வுசெய்ய வேண்டும்” - முதல்வராக பொறுப்பேற்றதுமே மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே தந்த அறிவுறுத்தல் இது. ஆனால், “வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சிக்கு முதல்வர் சொன்னது தெரியாதா” என ஆதங்கப்படுகிறார்கள் விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையினர். அருப்புக்கோட்டை தாசில்தாராக இருப்பவர் ரவிச்சந்திரன். தான் சார்ந்த ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவரை தனக்கு சீனியர் பிஏ-வாக கொண்டுவர சிபாரிசு செய்திருக்கிறாராம் அண்ணாச்சி. விஜிலென்ஸ் வழக்கில் சிக்கிய இவரை எப்படி தனக்கு பிஏ-வாக அழைக்கிறார் அண்ணாச்சி என்பதே வருவாய்த்துறையினரின் ஆதங்கம். இதனிடையே இப்போதே அமைச்சருக்கு பிஏ ஆகிவிட்டது போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரைக்கும் அதிகாரத் தோரணை காட்டுகிறாராம் ரவிச்சந்திரன். இதுக்குத்தானேங்க ஸ்டாலின் பயந்தாரு!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்