இன்று சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம்; கிராசிங்குகளில் பொறுமையுடன் செயல்படுங்கள்: வாகன ஓட்டுநர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்

இன்று சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம்; கிராசிங்குகளில் பொறுமையுடன் செயல்படுங்கள்: வாகன ஓட்டுநர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்
Updated on
1 min read

சர்வதேச ரயில்வே லெவல் கிராஸிங் விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

லெவல் கிராசிங் என்பது சாலையும், ரயில் பாதையையும் இணையும் சந்திப்பு.

ஓடும் ரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்துவது சாத்தியம் இல்லாததால், சாலையில் செல்லும் வாகனங்கள் நின்று செல்லும் வகையில் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் இரும்பு கேட்டுகள் அமைக்கப்படுகின்றன. மிகக் குறைந்த அளவு சாலை போக்குவரத்து உள்ள லெவல் கிராசிங்குகளில் ரயில்வே கேட்கள் அமைக்கப்படாமல் இருந்தன.

இப்பகுதிகளில் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்பட்டன. இதுபோன்ற ரயில்வே கேட்டுகள் இல்லாத லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டு சுரங்கப்பாதைகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 429 ரயில்வே கேட்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் வாக னங்களுக்கு மேல் கடக்கும் லெவல் கிராசிங் அமைந்துள்ள இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக் கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: மதுரை கோட்டத்தில் தற்போது 94 ரயில்வே மேம்பாலங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 61 லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலக் கட்டுமான பணிகளும் நடைபெறுகின்றன.

ரயில்கள் வேகமாக இயக்கப் படுவதால் ரயில்வே லெவல் கிராசிங்கேட்டுகளில் கடக்கும் வாகன ஓட்டுநர்கள் பொறுமையுடன் செயல்பட்டு கேட்டை திறந்த பின் சென்று விபத்துகளை தவிர்க்க உதவ வேண்டும். இவர்க ளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சர்வதேச அளவில் இந்த விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in