

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 138 பேருக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது: கரோனாவிலிருந்து மக் களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து வகை முன்களப் பணியாளர்களே உண்மை யான ஹீரோக்கள். இதற்கான ஒரு பங்களிப்பாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை யும் இணைந்துள்ளது.
இதுவரை எங்கள் மருத்துவ மனையில் 2,634 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 2,473 பேர் குணமடைந்தனர்.
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 138 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.