தென்மண்டல அளவில் 100 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் : ஐ.ஜி டி.எஸ். அன்பு உத்தரவு

தென்மண்டல அளவில் 100 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் : ஐ.ஜி டி.எஸ். அன்பு உத்தரவு
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களை மீண்டும் அவர்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி டி.எஸ்.அன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் பணிபுரிந்த பழைய இடம்):

காவல் ஆய்வாளர் துரைபாண்டி சாத் தூரில் இருந்து மதுரை நகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அனுசியா மனோகரி (மானாமதுரை), சங்கீதா (விருதுநகர் மேற்கு), சுரேஷ் (சிவகங்கை சாக்கோட்டை), நாகராணி (திண்டுக்கல் மேற்கு), சக்குபாய் (திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு), கீதாரமணி (போடி மகளிர்), லோகேஸ்வரி (தேவிபட்டினம்), தமிழ்செல்வன் (சாயல் குடி), செல்வகுமார் (மதுரை எஸ்பி தனிப்பிரிவு), விமலா (விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு), மாடசாமி (விருதுநகர் புறநகர்), பாண்டியன் (பரமக்குடி தாலுகா), தீபா (கடலாடி) ஆகியோர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை நகரில் பணிபுரிந்த ஆய்வா ளர்கள் மனோகரன், ஜானகி, கலா, சரஸ்வதி, முத்துராஜ், ஜெயச்சந்திரன், மாரீஸ்வரி, ஆதம்அலி ஆகியோர் நெல்லை சரகத்துக்கும், ஆடிவேல் ராமநாதபுரம் சரகத்துக்கும், பத்மநாபன் மதுரை சரகத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். காந்திமதி (மதுரை திருநகர்), வனசுந்தரி (தல்லாகுளம்), ஆர்.கோமதி (கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு), முத்துலட்சுமி (தூத்துக்குடி குற்றப்பிரிவு), ஹரிகரன் (செங்கோட்டை), முருகன் (நெல்லை சிறப்பு புலனாய்வுப் பிரிவு), ஷோபா சென்சி (தூத்துக்குடி கல்லுக்குளம்), ஆக்னெஜ் பொன்மணி (தென்காசி பொருளாதாரக் குற்றப்பிரிவு), பிரவீனா (சங்கரன்கோயில் நகர்), சாம்சன் (நாகர்கோவில்) ஆகியோர் நெல்லை நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வீராகாந்தி ((மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு), சங்கரேசுவரன் (ஊமச்சிகுளம்), வினோதா (வில்லிபுத்துார் நகர்), சரவண தேவேந்திரன் (ராஜபாளையம் தெற்கு), முத்துமணி (சேத்தூர்), மங்கையர் திலகம் (சாத்தூர் மதுவிலக்கு), விக்டோரியா லுார்துமேரி (ராஜபாளையம் மகளிர்), கவிதா (வில்லிபுத்தூர் மகளிர்), தெய்வம் (ராஜபாளையம் வடக்கு), சத்யா (விருதுநகர் மகளிர்), லட்சுமிபிரபா (விருதுநகர் மதுவிலக்கு), காயத்ரி (மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு), ராமலட்சுமி (மதுரை புறநகர்), சேகர் (ஒத்தக்கடை), முருகன் (சாத்தூர் நகர்), ரமேஷ்குமார் (திருத்தங்கல்), மீனாட்சி (மதுரை எழுமலை), உஷா (பேரையூர்), ஜோதிபாபு (திருமங்கலம் மதுவிலக்கு), வெங்கடாசலபதி (சிவகாசி நகர்), ராஜசேகர் (செக்கானூரணி) ஆகி யோர் திண்டுக்கல் காவல் சரகத்துக்கு மாற்றப் பட்டுள்ளனர்.

மகேஷ்வரி (மதுரை ஜெய்ஹிந்த்புரம்), முத்துப்பாண்டி (திடீர்நகர்), நாகலட்சுமி (திருப்பரங்குன்றம் மகளிர்), பார்த்திபன் (திருப்பாலை), பத்மநாபன் (நெல்லை பெருமாள்புரம்), பவுன் ஏசுதாசன் (நிலக்கோட்டை), தேவமாதா (திண்டுக்கல் மதுவிலக்கு), செந்தாமரை (தேனி மகளிர்), பானுமதி (திண்டுக்கல் குற்றப்பிரிவு), கண்ணன் (திண்டுக்கல்), குணசுந்தரி (பழநி மகளிர்), மூக்கன் (திண்டுக்கல் அம்பாத்துறை), தென்றல் (வடமதுரை மகளிர்), பார்த்திபன் (திண்டுக்கல் தாலுகா), கிரேஸ் சோபியா பாய் (கன்னிவாடி), மலர்விழி (பட்டிவீரன்பட்டி), பரமேசுவரி (செம்பட்டி), சம்பத் (பழநி தாலுகா), முத்துக்குமரன் (போடி நகர்), கீதா பெரியநாச்சியார் (திண்டுக்கல் சிறப்புப் பிரிவு), முத்து (ஆண்டிபட்டி), குருவதை (தேனி அல்லிநகரம்), மரிய பாக்கியம் (உத்தமபாளையம் மகளிர்), வீரசோலை (திண்டுக்கல் சிறப்புப் பிரிவு), னிவாசகன் (ஒட்டன்சத்திரம்) ஆகியோர் திண்டுக்கல் சரகத்துக்கும், சுரேஷ் (வடமதுரை) நெல்லை சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய 23 ஆய்வாளர்கள் திண்டுக்கல் காவல் சரகத்துக்கும், சிவகங்கை, ராம நாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்த 7 ஆய்வாளர்கள் மதுரை நகர் காவல் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை நகர், நெல்லை, திண்டுக்கலில் பணிபுரிந்த 10 ஆய்வாளர்கள் ராமநாதபுரம் சரகத்துக்கும், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பணியாற்றிய 8 பேர் நெல்லை நகருக்கும், திண்டுக்கல், நெல்லை நகரில் பணியில் இருந்த 9 ஆய்வாளர்களை நெல்லை சரகத்துக்கும் இடமாற்றம் செய்து தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in