Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மலைக்கோட்டை கோயில் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் வகையில் உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என மாநில நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளத்தில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் திருமஞ்சனகாவிரி என்ற மலட்டாற்றில் இருந்து தண்ணீர் நிரப்பும் பணியை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களி டம் அவர் கூறியது: ரங்கம், திருவானைக்காவல், மலைக் கோட்டை கோயில் தெப்பக் குளங்களில் தண்ணீர் எப்போதும் தேங்கியிருக்கும் வகையில் பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ரங்கம், திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் வந்து, மிகை தண்ணீர் வெளியேற வசதி உள்ளது. இதே போல, மலைக்கோட்டை தெப்பக் குளத்துக்கு தண்ணீர் வருவதற் கும், அங்கிருந்து வெளியே செல் வதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

திருச்சி மாவட்டத்தில் கிராப் பட்டி கொல்லாங்குளம், எடமலைப் பட்டிப்புதூர் காளியம்மன் கோயில் குளம் மற்றும் பெரிய மிளகுபாறை, ராமச்சந்திர நகர், சின்ன மிளகுபாறை ஆகிய இடங் களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குவாரிகள் ஆகியவற்றைச் சீரமைத்து, அதில் மழைக் காலங்களில் தண்ணீர் சேமித்து வைத்து, குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் களையும் வகை யில் மக்களுக்குப் பயன்படுத்தப் படவுள்ளன என்றார்.

தொடர்ந்து, ரங்கம் நந்த வனத்தில் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டு வரும் அடர் காட்டையும், எடமலைப்பட்டி கிராமத்தில் செல்வ காளியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணி யையும், கருமண்டபம் அசோக் நகரில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணியையும் அமைச் சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எம்எல்ஏக்கள் அ.சவுந்தர பாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, எஸ்.கதிரவன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப் பிரமணியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாநகராட்சி முதன்மைப் பொறி யாளர் எஸ்.அமுதவல்லி, செயற் பொறியாளர்கள் சிவபாதம், கும ரேசன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x