

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.முகமது ஷேக் அன்சாரி தலைமையில் சென்றுள்ள குழுவினரும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் செயற் குழு உறுப்பினர் ஏ.ஆபிருதீன் தலைமையில் சென்றுள்ள குழுவினரும் களப்பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட அளவிலும் பகுதி அள விலும் இதற்கான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 4,500 களப்பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமி ழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து அமைப்பின் சார்பில் நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை திரட்டி அனுப்பி யுள்ளனர்.
இதுவரை ரூ.53,75,355 மதிப்பிலான உதவிகள் 1,47,704 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக மருத்துவ முகாம்கள் நடத்தவும், குப்பைக் கழிவுகளை அகற்றவும், முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவர் எம்.முகமது இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு இந்த பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.