டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை சுவரில் துளையிடப்பட்டுள்ளது.
ரத்தினகிரி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை சுவரில் துளையிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடை பக்கவாட்டு சுவரில் துளையிட்டு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தென்னந்தி யாலம் சாலையில் அரசு டாஸ்மாக்மதுபானக்கடை உள்ளது.தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து, கடையில் 13 பெட்டிகளில் இருந்த உயர்ரக மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என கணக் கிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து ரத்தினகிரி காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி மற்றும் ரத்தினகிரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மதுபானக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தர், விற் பனையாளராக உள்ள சார்லஸ் ஆகியோர் அங்கு வரவழைக்கப் பட்டனர்.

அதன்பிறகு, கடையில் பதிவான கைரேகைகள் சேகரிக் கப்பட்டு, மதுபான கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்றது யாரென காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in