Published : 09 Jun 2021 06:37 PM
Last Updated : 09 Jun 2021 06:37 PM

5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 

சென்னை

சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் உட்பட மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு, மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவிகள் விவரம்:

1. தமிழ்நாடு தொழில் வளர்ச்சித் துறைக் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.கார்த்திகேயன் மாற்றப்பட்டு, மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பொதுத்துறை துணைச் செயலர் கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு, சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அலுவலர் கிராந்திகுமார் படி மாற்றப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர் விஷ்ணு சந்திரன் மாற்றப்பட்டு, நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் ராஜகோபால் சுங்கரா மாற்றப்பட்டு, கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. மாவட்ட வளர்ச்சி மைய திட்ட அலுவலர் நாகப்பட்டினம் எம்.எஸ்.பிரசாந்த் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னை வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையர் நார்னாவாரே மணிஷ் சங்கர்ராவ் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (சுகாதாரம்) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. பெரியகுளம் உதவி ஆட்சியர் சினேகா மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (கல்வி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. தாராபுரம் சப் கலெக்டராகப் பதவி வகிக்கும் பவன் குமார் கிரியப்பனாவர் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் (மாநில வரிகள்) சரவணன் மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் மாற்றப்பட்டு, கடலூர் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

13. பொள்ளாச்சி மாவட்ட உதவி ஆட்சியர் வைத்தியநாதன் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. தருமபுரி மாவட்ட உதவி ஆட்சியர் பிரதாப் மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. சிவகாசி மாவட்ட உதவி ஆட்சியர் தினேஷ்குமார் மாற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. மேட்டூர் உதவி ஆட்சியர் வி.சரவணன் மாற்றப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. திண்டிவனம் உதவி ஆட்சியர் எஸ்.அனு மாற்றப்பட்டு, பொதுப்பணித் துறை துணைச் செயலாளராக (புரோட்டோகால்) நியமிக்கப்பட்டுள்ளார்.

18. குளித்தலை உதவி ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. சேரன்மாதேவி உதவி ஆட்சியர் பிரதீக் தயாள் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. விருத்தாச்சலம் உதவி ஆட்சியர் பிரவீன்குமார் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. ராமநாதபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் சுகபுத்ரா மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட (வருவாய்த்துறை) கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. தூத்துக்குடி உதவி ஆட்சியர் சிம்ரஞ்ஜீத் சிங் கஹ்லான் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. ராணிப்பேட்டை உதவி ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. திருப்பத்தூர் உதவி ஆட்சியர் வந்தனா கார்க் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. பெரம்பலூர் உதவி ஆட்சியர் பத்மஜா மாற்றப்பட்டு, சேலம் சகோசெர்வ் (Sagoserve)நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x