

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 5 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரி லேயே முடிந்துவிட்டது. எழும் பூரில் இருந்து தென் மாவட்டங் களுக்கு 5 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இறுதி செய்த பின்னர், ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப் படும்’’ என்றனர்.