சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்த அம்மா சிமெண்ட்: அன்புமணி வலியுறுத்தல் 

சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்த அம்மா சிமெண்ட்: அன்புமணி வலியுறுத்தல் 
Updated on
1 min read

தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையைத் தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில நாட்களில் மூட்டை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது நியாயமற்றது. இது கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்.

ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைப்படவில்லை. தேவை குறைந்துள்ளது. அத்தகைய சூழலில் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம்.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையைத் தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in