மத்திய அரசு சார்பில் நபர் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்த 5 கிலோ கூடுதல் அரிசி மொத்தமாக வழங்க முடிவு :

மத்திய அரசு சார்பில் நபர் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்த 5 கிலோ கூடுதல் அரிசி மொத்தமாக வழங்க முடிவு :
Updated on
1 min read

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமான அளவைவிட கூடு தலாக நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி இந்த மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா பிரிவுக்கு மாதம் தோறும் அதிகபட்சம் 35 கிலோ வும் 93 லட்சம் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும் மீதமுள்ள முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும் வழங் கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்களின் தேவைக் கேற்ப புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கிக் கொள்ளலாம்.

மே மற்றும் ஜூன் மாதம்

கரோனா பரவலின் 2-ம் அலை யால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே மற்றும் ஜூன் மாதங்களில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ தானியங்களை இலவச மாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டு மின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது. உதாரணமாக, இருவர் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ, 3 பேர் உள்ள குடும்பத்துக்கு 30 கிலோ அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்படும் அளவுடன் சேர்த்து இரு மடங்கு அரிசி கிடைக்கும். மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி விநியோகம் ஜூலை மாதத்தில் சேர்த்து வழங்கப்படும்.

எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியையும் சேர்த்து அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக விநியோ கிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் விளம் பரப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in