

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக சார்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜன.31-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னையைச் சேர்த்த அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பங்கேற்றார். அப்போது நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது கணவர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி கல்யாணராமனின் மனைவி சாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவதூறாக பேசியதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்யாணராமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.