Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

48 நாளாக பிணவறையில் இருக்கும் பாளை. மத்திய சிறைக் கைதி உடல்: தந்தைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

கோப்புப்படம்

மதுரை

பாளை சிறையில் கொலையான கைதியின் சடலம் 48 நாளாக பிணவறையில் வைக்கப்பட்டிருக் கும் நிலையில், சடலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை செயல்படுத்துமாறு கைதியின் தந்தைக்கு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நெல்லை வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவனாசம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் முத்து மனோ (27), கொலை மிரட்டல் வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏப். 22-ல் முத்து மனோ சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கொலை நடைபெறுவதற்கு முன்பு வரை முத்து மனோ வைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பாளை சிறைக்கு மாற்றிய நாளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பாளை சிறைக்கு மாற்றிய தில் உள்நோக்கம் உள்ளது.

முத்து மனோ கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும், சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், மனுதாரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மனுதாரர் தனது மகனின் சடலத்தை வாங்காமல் உள்ளார். சடலம் 48 நாளாக பிணவறையில் உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் பல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். ஒவ் வொரு மனுவிலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். மனுதாரரின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றவில்லை. கரோனா காலத்தில் கொலையான மகனின் சடலத்தை 48 நாட்களாக பெற்றுக்கொள்ளாமல் இருப்பதை ஏற்க முடியாது.

முதலில் மனுதாரர் நீதிமன்ற உத்தரவுபடி அவரது மகனின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யலாம்.

மனுதாரர் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட பிறகு அவரது வழக்கில் விரிவான விசாரணை நடத்தப் படும் என்று கூறி விசார ணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x