Published : 08 Jun 2021 06:45 PM
Last Updated : 08 Jun 2021 06:45 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே மாதத்தில் கரோனா பாதித்த 87 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மே மாதத்தில் கரோனா பாதித்த 87 கர்ப்பிணிப் பெண்களைக் குணப்படுத்தி மகப்பேறு மருத்துவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவமும் பார்த்து தாயையும், சேயையும் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்தாலம் பரவல் இன்னும் ஓயவில்லை. இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்படி சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான மருத்துவசேவை மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனையில் தடைபடாமல் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்கின்றன.

கடந்த ஆண்டு முதல் அலையில் கரோனா பாதித்த 400 கர்ப்பிணி பெண்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் சிறப்பான முறையில் பிரவசம் பார்த்து வீட்டிற்கு அனுப்பினர். அதுபோல், இந்த இரண்டாவது அலையிலும் கரோனா பாதித்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமடைந்து செல்கின்றனர்.

இதுவரை இந்த இரண்டாவது அலையில் கரோனா பாதித்த 360 கர்ப்பிணி பெண்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இதுவரை 110 பேருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்து அவர்களை முழுமையாக குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதில், மே மாதத்தில் மட்டுமே கரோனா பாதித்த 88 கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் பிரசவம் பார்த்து சாதனைப்படைத்துள்ளனர்.

பிப்ரவரி, மார்ச் மாதம் கரோனா பாதிப்பு ஒரளவு குறைவாக இருந்தநிலையில் மே மாதம் உச்சமாக இருந்ததாலேயே அந்த மாதத்தில் கரோனா பாதித்த அதிகமான கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதனாலேயே மே மாதத்தில் அதிகமான கரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கான கரோனா வார்டில் தற்போது 27 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x