நியூட்ரினோ ஆய்வகம்; காட்டுயிர் அனுமதி கோரிய விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக, காட்டுயிர் அனுமதி கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆய்வகம் அமைப்பதற்கான காட்டுயிர் அனுமதி கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 08) தனது ட்விட்டர் பக்கத்தில், "தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக, காட்டுயிர் அனுமதி (Wildlife Clearance) கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைத்து எந்தக் காரணம் கொண்டும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in