

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா நெருக்கடிகளை எதிர்கொள்ள பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் எல் அண்ட் டி நிறுவனம் தமிழகத்துக்கு 6 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் வழங்க முன்வந்துள்ளது.
500 எல்பிஎம் திறன் கொண்ட முதல் ஆலையை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் 5 ஆக்சிஜன் ஆலைகளை தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
செங்கல்பட்டு, சைதாபேட்டை ஆகிய மருத்துவமனைகளுக்கு 500 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்சிஜன் ஆலைகளையும். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐமருத்துவமனை, கோயம்புத்தூர்மற்றும் ஈரோடு மருத்துவமனைகளில் தலா 1000 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்சிஜன் ஆலைகளையும் அமைக்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சுமார் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் 6 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் 4 முதல் 6 வாரங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளது.