

பல் மருத்துவம் படிக்கும் தன் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி.
திருச்சி, மேலக் கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிர மணி. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். தன் வயதான தாய், மனைவி, மகன் சந்தோஷ்குமார், மகள் சினேகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மகன் சந்தோஷ்குமார் 2012-ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 975 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ கவுன்சலிங்கில் மதுரை யில் உள்ள பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. ஆனால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டு மென தெரிவித்ததால் அந்த ஆண்டு கல்லூரியில் சேரவில்லை. இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் வகுப்பின ருக்கு கல்விக் கட்டணத்தை அரசு வழங்கும் என நண்பர்கள் தெரிவித் ததைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் தான் கல்லூரியில் சேர்ந்தார்.
கல்லூரிக்கு கட்ட வேண்டிய ஆண்டுக் கட்டணம் ரூ.2 லட்சத்தில், கல்விக் கட்டணம் ரூ.1.15 லட்சத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை வழங்கியது. முதலாண் டில் மீதமுள்ள தொகையான ரூ.85 ஆயிரத்தை செலுத்த தாமத மானதால் 6 மாதங்களுக்கு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. அதன்பிறகு கடன் வாங்கி கட்டணத்தைச் செலுத்தி, மகனை கல்லூரியில் சேர்த்தார் சுப்பிரமணி.
இதைத் தொடர்ந்து தற்போது 2-ம் ஆண்டில் அரசு வழங்கிய கல்விக் கட்டணம் போக மீதமுள்ள கட்ட ணம் ரூ.85 ஆயிரத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து சுப்பிரமணி ‘தி இந்து’விடம் கூறியபோது, “ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தான் வாழ்க்கையை நடத்தி வருகி றேன். மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியதைத் தொடர்ந்து திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நீலமேகம், சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரூ.25,000 அளித்தனர். இந்த தொகையை செலுத்தி உள்ளேன். மீதமுள்ள தொகையை விரைந்த கட்டினால் தான் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வெழுத முடியும். மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் என பலருக்கும் கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை.
கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி விடுவதால், வங்கியிலும் கல்விக் கடன் வழங்க முடியாது என தெரிவித்துவிட்டனர். இந்த ஆண்டு மட்டுமல்லாது படிப்பை முடிக்க இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன, என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல மனம் படைத்தவர்கள் உதவினால், அதை உயிருள்ள வரை மறக்க மாட்டேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
மாணவர் சந்தோஷ்குமார் கூறியபோது, “எனக்கு மருத்து வம் படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், பல் மருத்து வம் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் கல்லூரியில் சேர்ந்தும் கட்ட ணம் செலுத்த முடியாதது பெரும் கவலையாக உள்ளது. முதலாண் டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். வரும் ஆண்டுகளிலும் நன்றாகப் படித்து மருத்துவராகி எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவி செய்ய வேண் டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார். சுப்பிரமணியின் தொடர்பு எண்: 98949 89561.