

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றிய கிராமங்களில் ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்தகுடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதி களைச்சேர்ந்த 4,000 குடும்பத்தினருக்கு உதவும்வகையில் அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ‘லோட்டஸ் ஸ்கல்ப்ச்சர்ஸ்’ என்ற சிற்பங்களை விற்பனைசெய்யும் நிறுவனத்தின் தலைவர்கெயில் டோர்டோரா மற்றும் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தபாபா ஸ்டோன்ஸ் சிற்பக்கலைகூட நிறுவனரும் சிற்பக் கலைஞருமான பாலன் அறிவுமணி ஆகியோர் இணைந்து, ஏழை மக்களின் குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அளவு கொண்ட அரிசி மூட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், இப்பகுதிகளை சேர்ந்தஏழை மக்களுக்கு அரசி மூட்டைகள் மற்றும் தானியங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்ய உள்ளதாக சிற்பக் கலைஞர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து தமிழகமக்களுக்கு உதவி செய்த சிற்பநிறுவனத் தலைவருக்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர்.