தென்மேற்கு பருவமழை தீவிரம் கொடைக்கானல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி.
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி.
Updated on
1 min read

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 20-ம் தேதிக்கு மேல் தாமதமாக தொடங்கியது. இந்த ஆண்டு வழக்கமான நேரத்தில் ஜூன் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப் பாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே 66.61 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதி யில் கன மழை பெய்து வருவதால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி மற்றும் எலி வால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை பெய்யும்போது மலை சரிவுகளில் சிறிய அளவில் புதிய புதிய அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஆனால் சுற்றுலாவுக்கு அனுமதி யில்லாததால் ரம்மியமான இயற்கை காட்சியை ரசிக்க சுற் றுலாப் பயணிகள்தான் இல்லை என்ற நிலை உள்ளது.

அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மலைப் பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அருவிகளில் விழும் தண்ணீர் மலையடிவாரத்துக்கு செல்வதால் மஞ்சளாறு அணை, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, மருதாநதி அணை மற்றும் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in