பாஜக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

பாஜக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
Updated on
1 min read

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் மழை யால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருள்களை பொன்.ராதாகிருஷ் ணன், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாத மாக பாஜக தொண்டர்கள் உதவி செய்து வருகின்றனர். மயிலாப் பூர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத் துக்கும் அதிகமான குடும்பங் களுக்கு பாஜகவினர் உதவி செய்துள்ளனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்துள் ளது. மேலும் தேவையான உதவி களைச் செய்ய தயாராக உள்ளது. சேதமடைந்த தொழிற்சாலைகளை சீரமைக்கவும், வீடுகளை இழந் தவர்களுக்கு வீடுகள் கட்டவும் மத்திய அரசு உதவி செய்யும். பழுதடைந்த தேசிய நெடுஞ் சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேமுதிக தலைவர் விஜய காந்தை மக்கள் நலக் கூட்டணி யின் தலைவர்கள் சந்தித்துப் பேசியிருப்பதை வழக்கமான ஒரு அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கிறேன். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக இருக்க கட்சிகள் வலு வான 3-வது அணியை அமைக்க விரும்புகின்றன. அதற்காகவே வைகோ உள்ளிட்டோர் விஜய காந்தை சந்தித்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் தேமுதிக நீடிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந் தக் கூட்டணியில் தேமுதிக தொட ரும். விஜயகாந்த் அதையே விரும்பு வார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், ஏ.என்.எஸ். பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in