கரோனா பணிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மட்டுமே; உணவு, தங்கும் வசதியில்லை: கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

உணவு, தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள்.
உணவு, தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள்.
Updated on
1 min read

உணவு, தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள் இன்று (மே 7) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தற்போது கரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பயின்று வரும் 150 பயிற்சி மருத்துவர்கள் சுழற்சி முறையில் கரோனா மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாகப் பயிற்சி மருத்துவ மாணவர்கள் சிலர் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊதியமாக ரூ.25 ஆயிரம் அளிக்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மட்டுமே அளிக்கின்றனர். அதோடு, தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தித் தரவில்லை. எனவே, உடனடியாக தங்குமிடம், உணவு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" என்றனர்.

இதையடுத்து, மாணவர்களுடன் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தினர், 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in