

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முல்லை பெரி யாறு அணை பிரச் சினையை மீண்டும் எழுப்ப கேரளம் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு முடிவு கட்டும் வகையில் அணையின் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அணையின் நீர்மட் டத்தை 152 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றமும், கண்காணிப்பு குழுவும் அனுமதி அளித்துவிட்ட நிலையில், அணையை வலுப் படுத்தி, அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘புவி வெப்பம் அதிகரித்து வருவதை யும், அதனால் ஏற்படும் பாதிப்பு களையும் தடுப்பதற்காக 1992-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. காலநிலை பணித்திட்ட பேரவை, 23 ஆண்டுகளாக நடத்திவரும் பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் 'பாரிஸ் வரைவு ஒப்பந்தம்’ உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களை முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.