

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்களில் இன்று மாலை நடக்கும் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்பட உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்வார்கள். கரோனா பரவல் காரணமாக, கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள்புறப்பாடும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற யூ-டியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தியாகராஜ சுவாமி கோயில்
இதேபோல, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு நந்தியம்பெருமான் அபிஷேகமும், தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற யூ-டியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.