சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுரை

சிதம்பரம் அருகே வண்டி கேட் பகுதியில் பாலம் கட்டும் பணியை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே வண்டி கேட் பகுதியில் பாலம் கட்டும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

சிதம்பரம் அருகே பாலம் கட்டும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் அருகே வண்டி கேட்டுக்கு செல்லும் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இது குறித்துஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பொது மக்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று அமைச்சர் பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏன் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஒரு மாத காலத்திற்குள் பணிகளை முடித்து விடுவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்காவிட்டால் அரசு ஒப்பந்த பணி பட்டியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரித்து சென்றார். சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in