கொடைக்கானல் மலைப் பகுதியில் காபி, மிளகு விளைச்சல் பாதிப்பு

கொடைக்கானல் மலைப் பகுதியில் காபி, மிளகு விளைச்சல் பாதிப்பு
Updated on
1 min read

சமீபத்தில் பெய்த தொடர் மழையால், கொடைக்கானல் மலைப் பகுதியில் பணப்பயிர்களான காபி, மிளகு உள்ளிட்டவை அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியதால் விவசாயி களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் கீழ்மலை பகுதி களான தாண்டிக்குடி, தடியன் குடிசை, மங்களங்கொம்பு, பெரும் பாறை, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, பூலத்தூர், ஆடலூர், பன்றி மலை, பாச்சலூர் உள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் அதிக அளவில் காபி, மிளகு, ஆரஞ்சு, மலை வாழை, அவக்கடா, பட்டர் பீன்ஸ் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.

நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த தொடர்மழையால் இப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. காற்றுடன் பெய்த மழையால் பல வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. காபி செடியில் உள்ள ஏராளமான பழங்கள் உதிர்ந்துவிட்டன. செடி யில் உள்ள காபி பழங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அவக்கடா, ஆரஞ்சு உள்ளிட்டவை செடியிலேயே அழுகிவிட்டன.

கொடைக் கானல் கீழ்மலை பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பயிர்கள் சேதமடைந்து விட்டன. இதனால் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: தொடர் மழை யால் மலைப்பயிர்கள் பாதிப்புக் குள்ளானதை, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

புதிய பயிர்க் கடன்களை வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத் துணை இயக்குநர் கிஷோர்குமார் கூறியதாவது: ஆர்.டி.ஓ. சுரேஷ் குமார் தலைமையில் கொடைக் கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் பயிர் சேதம் குறித்து பார்வையிட்டு கணக்கெடுக்கப் பட்டுள்ளது. காபி, ஆரஞ்சு, அவக்கடா பழங்கள் அதிகளவில் செடிகளில் இருந்து உதிர்ந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆர்.டி.ஓ. அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in