Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

கரோனா காலத்தில் செல்லப்பிராணிகளிடம் உரிய இடைவெளியை கடைபிடிப்பது நல்லது: உயிரியல் பூங்கா மருத்துவர் செந்தில் தகவல்

கரோனா காலத்தில் செல்லப்பி ராணி களிடம் உரிய இடை வெளியை கடைபிடிப்பது நல்லது என கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா மருத்துவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மனிதர்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டி லேயே பெரிய விலங்கியல் பூங்காவாக திகழும் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்பூங்காவில் கரோனா தொற்று பாதிப்பால் பெண் சிங்கம் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதேபோல், ஹைதராபாத், ஜெய்ப்பூர், இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள விலங்கியல் பூங்காக்களில் உள்ள சிங்கங்களும் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களிலும் உரிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கோவையில் உள்ள மாநகராட்சி உயிரியல் பூங்காவில் பாம்புகள், பறவைகள், குரங்குகள், முதலைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று பரவலால் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநரும், மருத்துவருமான செந்தில் கூறும்போது, ‘‘சிங்கங்களுக்கு கரோனா பாதிப்புதான் ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. கரோனா தொற்று ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு எளிதாக பரவாது. எங்காவது ஒரு சம்பவம் நிகழ வாய்ப்புள்ளது. அதேபோன்று விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. செல்லப்பிராணிகள் மூலமாக பரவுமா என்றால், பரவலாக இல்லை. இருப்பினும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், முன்னெச்சரிக்கையாக அவற்றிட மிருந்து உரிய இடைவெளியை கடைபிடிப்பது, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

தமிழகத்தில் தற்போது உயிரியல் பூங்காக்கள்அனைத்தும் அடைக்கப்பட்டுள் ளன. இதனால் பராமரிப்புப் பணியா ளர்கள் தவிர, மனிதர்கள் நடமாட்டம் பூங்காக்களில் இல்லை. எனவே, பூங்காக்களில் தொற்று பரவலுக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தொற்று தடுப்புப் பணிகள் கோவை உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x