மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Published on

தமிழகத்தில் மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

மாற்றப்பட்ட அதிகாரிகளும், புதிய பொறுப்பும்:

1. ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தங்கதுரை மாற்றப்பட்டு, மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மாற்றப்பட்டு, மதுரை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஜி ஈஸ்வரன் மாற்றப்பட்டு, மதுரை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கோயம்புத்தூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் பி.ஜெயச்சந்திரன் மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. சென்னை போலீஸ் அகாடமி நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் பதவி வைக்கும் செல்வராஜ் மாற்றப்பட்டு, கோவை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சென்னை, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை எட்டாவது பிரிவு கமாண்டன்ட் எஸ்.ஆர்.செந்தில்குமார் மாற்றப்பட்டு, கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் மாற்றப்பட்டு, திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையர் பதவி வகிக்கும் முத்தரசு மாற்றப்பட்டு, திருச்சி நகரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மேற்குப் பிரிவு எஸ்.பி. மோகன்ராஜ் மாற்றப்பட்டு, சேலம் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் மாற்றப்பட்டு, சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மாற்றப்பட்டு, திருப்பூர் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ரவி மாற்றப்பட்டு, திருப்பூர் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. சென்னை, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தில்லை நடராஜன் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. ஆவின் விஜிலன்ஸ் எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் ரோஹித்நாதன் ராஜகோபால் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் பண்டி கங்காதர் மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. சென்னை தலைமையிட ஏஐஜி வி.எஸ்.ஷியாமளாதேவி மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மத்தியப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் மயில்வாகனன் மாற்றப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்குப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in