விக்கிரவாண்டி அருகே உள்ள குலதெய்வ கோயிலில் அய்யனார் குதிரை காலில் சீட்டு கட்டி முதல்வர் ரங்கசாமி பிரார்த்தனை

குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டு கட்டும் முதல்வர் ரங்கசாமி.
குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டு கட்டும் முதல்வர் ரங்கசாமி.
Updated on
1 min read

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். முருக பக்தரான ரங்கசாமி ஆண்டுதோறும் திருச் செந்தூர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவார். தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு கோரிமேட்டில் தனியாக ஒரு கோயில் கட்டியுள்ளார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை, அன்னதானம் செய்து வழிபடுவார். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சேலம்அப்பா பைத்தியம் சாமி ஜீவ சமாதிக்கு சென்று வருவார்.

நடந்து முடிந்த சடடப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ரங்கசாமி முதல்வரானதும், கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. சமீபத்தில் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சித்தணி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு நேற்று சென்றார். அய்யனாரப்பன், பொற்கலை, பூரணி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோயில் வாயிலில் உள்ள குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டையும் ரங்கசாமி கட்டி பிரார்த்தனை செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in