

திருவெறும்பூர் சட்டப்பேரவை அலுவலகத்தில், பல்வேறு அமைப் புகள் வழங்கிய ரூ.22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகர ணங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் சுகாதாரத் துறையினரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை பரவி வருவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில், பல்வேறு அமைப்பினர் வழங்கிய முகக் கவசம், கையுறை, சானிடைசர், தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத் துறையினரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வழங்கினார்.
இவை, திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக் குட்பட்ட சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம் கணேஷ், இணை இயக்குநர் லட்சுமி, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார், துவாக்குடி மருத்துவமனை தலைமை அலுவலர் கோவிந்த நாதன், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.