ஆதம்பாக்கத்தில் கழிவுநீர் குழாயில் உடைப்பு: வீடுகளில் தேங்கினால் புகார் தெரிவிக்கலாம்

ஆதம்பாக்கத்தில் கழிவுநீர் குழாயில் உடைப்பு: வீடுகளில் தேங்கினால் புகார் தெரிவிக்கலாம்
Updated on
1 min read

சென்னை குடிநீர் வாரியம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோடு பகுதியில் அண்மை யில் பெய்த கனமழையால் 15 அடி ஆழத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ராமகிருஷ்ணாபுரம், ஏரிக்கரை தெரு, மஸ்தான் கோரி தெரு, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள சில வீடுகளில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடைந்த குழாய்களை சரி செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி வீடுகளில் கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க, மாற்றுப்பாதையில் தற்காலிகமாக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் ஊர்திகள் மூலமும், சூப்பர் சக்கர் இயந்திரங்கள் மூலமும் தேங்கிய கழிவுநீர் அகற்றப்பட்டன. உடைந்த கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணி முழுவதுமாக முடியும் வரை, வீடுகளில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டால், பகுதி பொறியாளர் (8144930912), துணைப் பகுதி பொறியாளர் (8144930266), உதவி பொறியாளர் (8144930163) ஆகியோரை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in