சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் கேள்வி எழுப்பிய மாணவர் மீது தாக்குதல்: மாணவர்கள் போராட்டம்

சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் கேள்வி எழுப்பிய மாணவர் மீது தாக்குதல்: மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கேள்வியெழுப்பிய பல்கலைக்கழக மாணவரை, பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் தாக் கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் மாநில தேர்தல் ஆணைய செயலர், ஜோதி நிர்மலா சாமி அரசு மேற் கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக பேசிக் கொண் டிருந்தார். அப்போது பார்வை யாளர் பகுதியிலிருந்து ஒரு இளைஞர் கைதட்டியபடி எழுந் தார். “2 வாரங்கள் சென்னை என்ன நிலையிலிருந்தது என்பதை அனைவரும் அறிவோம். இது அரசு சாதனைகளை விளம்பரப்படுத்தும் கூட்டம் அல்ல. பேரிடர் மேலாண்மை குறித்து பேசுங்கள்” என்றார். அந்த இளைஞரை பல்கலைக்கழக பணி யாளர்கள், பேராசிரியர்கள் சூழ்ந்து கொண்டனர். ஜோதி நிர்மலா சாமி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

மறுபடி அந்த இளைஞர், “கருத் தரங்கில் பயனுள்ள கருத்தை கூறுங்கள்” என குரல் எழுப்பினார். உடனே பல்கலைக்கழக பேரா சிரியர்கள், ஊழியர்கள் அந்த இளைஞரை தர தரவென இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். அவரது முகம், கழுத்து, கைகளில் அடி விழுந்தது. அந்த இளைஞர் தன்னை காப்பாற்றச் சொல்லி அபயக் குரல் எழுப்பினார். அவரை பல்கலைக்கழக ஊழியர்கள், முதல் தளத்தில் உள்ள துறை நூலகத்தில் அடைத்து வைத்தனர்.

ஜோனஸ் ஆண்டன் என்கிற பெயர் கொண்ட அந்த இளைஞர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் எனவும் தற்போது பிரான்ஸில் குடியுரிமை பெற்று இந்தியா வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலை பாடப்பிரிவு 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவர் தாக்கப்பட்ட செய்தி மற்ற மாணவர்களிடையே பரவி யது. “துணைவேந்தர் நிபந்தனை யற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் மெரினா கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவோம்” எனக் கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் திரண்டனர். அப்போது கோட்டையில் முதல்வர் இருந்தார். அவர் வீடு திரும்பும் நேரத்தில் பிரச்சினையாகிவிடக் கூடாதே என்பதால் பல்கலைக்கழக வளாக வாயில்கள் மூடப்பட்டன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதனால், மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். பின்னர், துணைவேந்தர் அலுவலகத்தில் போலீஸார் மற்றும் மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துணைவேந்தர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததால் மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர் களில் ஒரு பிரிவினர், “தாக்குத லில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரித்துள்ளதால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in