Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

மத்திய அரசை மட்டும் நம்பாமல் வெளிநாடுகளில் தடுப்பூசி வாங்க வேண்டும்: புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

மத்திய அரசை மட்டும் நம்பாமல் பிற மாநிலங்களைப்போல் வெளிநாடுகளிலும் தடுப்பூசியை வாங்கு வதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என்றுவைத்திலிங்கம் எம்பி தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக வைத்தி லிங்கம் எம்பி நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் 18 முதல் 45 வயதுள்ளவர்கள் 6 லட்சம் பேர் உள் ளனர். இவர்களுக்கு போதியளவு தடுப்பூசி கிடைக்காத நிலை தான் உண்மை. இப்பிரிவினருக்கு நாள்ஒன்றுக்கு 500 தடுப்பூசி தான்போடப்படுகின்றன. அனைவ ருக்கும் போட்டு முடிக்க ஆண்டுக்கணக்காகும். ஆனால் அப்பிரிவி னர் தான் சமுதாயத்தில் குடும்பத் திற்கு பொருளீட்ட வெளியே சென்று வீடு திரும்புகின்றனர்.

இதை உணர்ந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை மட்டும் நம்பாமல் பிற மாநிலங்களைப்போல் வெளிநாடுகளிலும் தடுப்பூசியை வாங்குவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும். புதுச்சேரியில் அனைத்து தரப்பி னருக்கும் தடுப்பூசி போட வேண்டி கட்சி சார்பில் குழு அமைத்து துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

கடந்த மே மாதத்தில் மட்டும் ஓராண்டில் நடைபெறாத அளவு உயிரிழப்பு நடந்துள்ளது. தடுப்பூசி யும், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையும் தான் மிகுந்த தொற்றுக்கு காரணம். சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். ஆனால் எடுக்காதது, பெரிய வேதனையாக உள்ளது. மருத்துவமனையில் சரியான உணவு கூட வழங்கப்படவில்லை.

தடுப்பூசி பற்றாக்குறை

பிரதமரின் நிவாரண நிதி மட்டுமல்ல, கரோனா தடுப்பூசியும் கூட எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. 1.5 லட்சம் தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் உள்ளது. 45 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது மறுக்க முடி யாத உண்மை. எனவே பாஜக எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் தெரிவித்து தடுப்பூசியை கொண்டுவந்து அனைவருக்கும் போடச் செய்ய வேண்டும். பாஜக விற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது.என்ஆர் காங்கிரஸை பாஜக எதிர்க்கட்சியாகத்தான் பார்க்கிறது. அதனால்தான் பல்வேறு தொல் லைகளை தருகிறது. ரங்கசாமி பாவம். இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசியும், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையும் தான் மிகுந்த தொற்றுக்கு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x