Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

ஊரடங்கு, விளைச்சல் கூடுதலால் காய்கறி விலை வீழ்ச்சி: மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் சிக்கல்

கோப்புப்படம்

மதுரை

கோடை மழையால் காய்கறிகள் நல்ல விளைச்சல் கண்டும் அறுவடை செய்த காய்கறிகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் விலை வீழ்ச்சியடைந் துள்ளது.

காய்கறிகள் விற்பனைக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தான் முக்கிய சீசன். மார்க்கெட்டுகளில் திருமண நிகழ்வுகளுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும், ஹோட்டல் களுக்கும் அதிகளவு காய்கறிகள் விற்பனை செய்யப்படும். கரோனா ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. நகரில் சில ஹோட்டல்களில் மட்டும் பார்சல்கள் வழங்கப்படுகின்றன. இதனால் காய்கறி விற்பனை குறைந்து, அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துவிட்டது.

ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்களுக்கு தோட்டக்கலை, உள் ளாட்சி துறைகள் மூலம் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாநகராட்சிப் பகுதியில் ஓரளவுக்கு காய்கறிகள் விற்கப்பட்டாலும், பெரும்பாலான கிராமங்களுக்கு தற்போது வரை காய்கறிகள் சென்று சேரவில்லை. நகர்ப்புறங்களில் முக்கிய சாலைகளில் மட்டுமே நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நட மாடும் வாகனங்களில் கூட்டம் அதிகமாவதாகக் கூறி அபராதம் வசூலிக் கின்றனர். அதனால், ஓரிடத் தில் இருந்து மற்றொரு இடத்துக்கு காய்கறிகளைக் கொண்டு சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்களை போலீஸார் தடை செய்யாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.

சென்ட்ரல் மார்க்கெட் காய்கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது:

வழக்கத்தைவிட 25 சதவீதம் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந் துள்ளனர். ஊரடங்கை தளர்வு செய் தால்தான் மீண்டும் காய்கறிகள் விலை உயரும்.

நேற்று தக்காளி கிலோ ரூ.7, கத்தரிக்காய்-15, வெண்டைக்காய்-20, பெரிய வெங்காயம்-25, சின்ன வெங்காயம்-40, பாகற்காய் பெரியது-40, காரட்-30, பீன்ஸ்-50, முள் ளங்கி-20, உருளைக்கிழங்கு- 25, சேனை-25, கருணைக்கிழங்கு-40, சவ்சவ்-20, முள்ளங்கி-ரூ.18-க்கு விற் பனையானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x