வங்கி கணக்கு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை: சேதங்களை கணக்கிட 3,500 பேர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

வங்கி கணக்கு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை: சேதங்களை கணக்கிட 3,500 பேர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட 3,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும். வங்கி கணக்கு மூலமே நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் காஞ்சிபுரம் மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்காகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சேதங்கள் குறித்து கணக்கீடு செய் யவும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரி களும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சி யர், “வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் குறித்து கணக் கெடுப்பு செய்ய, அரசு சிறப்பு வருவாய் அலுவலர்களை நியமித் துள்ளது.

இதன்படி, மேற்கூறிய பணிக ளுக்காக சிறப்பு வருவாய் அலுவலர் கள் தலைமையில் 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 35 துணை ஆட்சியர்களும் உள்ள னர். இந்த குழுவில் 350 மேற் பார்வையாளர்கள், களப்பணி யாளர்கள் என மொத்தம் 3,500 பேர் இருப்பார்கள்.

இவர்கள், பாதிக்கப்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று கணக் கெடுப்பு செய்வர். கணக்கெடுப்பு செய்யும் பகுதியில் உள்ள மக்களின் விவரங்களை பெறுவ தற்காக படிவம் ஒன்று வழங்கப் பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண், குடும்ப அட்டை போன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கு மூலமே நிவாரண தொகை வழங்கப்படும். வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு, மேற்கூறிய பணியாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏதேனும் ஒரு வங்கியில், வங்கி கணக்கு ஏற்படுத்தி தரப்படும். இதனால், முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

இந்த பணிகள் குறித்து மேலும் விவரித்த மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, ‘மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள 10 குழுக்களில் உள்ள சிறப்பு வருவாய் அலுவலர் கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் பெறப்படும் தகவல்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள கணினிகளில் சிறப்பு பிரிவில் பதிவு செய்வர்.

இந்த பணிகள் அனைத்தும் வரும் 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், தகுதியான நபர் களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் மூலம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து வழங்க உள்ளதால், பொதுமக்கள் தனிநபர்களை அணுகி ஏமாற வேண்டாம்’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in