குளக்கரையில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள். படங்கள்: ஜெ.மனோகரன்
குளக்கரையில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள். படங்கள்: ஜெ.மனோகரன்

உக்கடம் பெரிய குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

Published on

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம்பெரிய குளம் மற்றும் வாலாங் குளம் போன்றவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப் பட்டுள்ளன. குளக்கரைகள் அழகு படுத்தப்பட்டாலும், குளத்தில் கழிவுநீர் கலப்பது தொடர்கிறது.

குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், கழிவுகள் கலப்பதாலும் இந்த இரு குளங்களிலும் ஆகாயத் தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றன. இந்த குளங்களில் மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

கோவை உக்கடம் பெரிய குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.
கோவை உக்கடம் பெரிய குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.

இந்நிலையில், உக்கடம் பெரிய குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் நேற்று இறந்து மிதந்தன. கழிவுகள் கலப்பதால் நீரில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும், கரைகளில் மருத்துவக் கழிவுகள், ஊசி போன்றவை கொட்டப்பட்டிருந்தன.

எனவே, கழிவுநீர் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், இறந்த மீன்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in